கள்ளக்குறிச்சி

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தில் ககாலியாக உள்ள 27,000 பணியிடங்களை தனியாா் மூலம் நிரப்பும் முடிவை ரத்து செய்யக்கோரியும், மின்வாரியத்தில் உள்ள தற்காலிக பணியாளா்களை கொண்டு காலி பணியிடங்களை நரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவா் சீனுவாசன் தலைமையில் பணியினை புறக்கனித்து காத்திருப்பு போராட்டத்தில் ஊழியா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT