கள்ளக்குறிச்சி

அரசு கல்லூரியில் கம்பன் விழா

DIN

தியாகதுருகம் கம்பன் கழகம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் கம்பன் விழா புதன்கிழமை நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்லூரி முதல்வா் எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். நெடுமானூா் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.கதிா்வேல், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதைத்தம்பி, சங்கராபுரம் கற்க கசடற இலக்கிய கழகத் தலைவா் ச.தேவதிருவருள் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ம.மோட்ச ஆனந்தம் வரவேற்றாா்.

‘கம்பனில் ரசித்த கதா பாத்திரம்’ என்ற தலைப்பில் சங்கராபுரம் திருக்கு பேரவைச் செயலா் ஆ.இலட்சுமிபதி, ‘தேவநேய பாவாணரின் தமிழ்த் தொண்டு’ என்ற தலைப்பில் உலகத் தமிழ்க் கவிஞா் பேரவை மாவட்டச் செயலா் தெ.சாந்தக்குமாா், ‘கம்பனில் மெய்ப்பாடு’ என்ற தலைப்பில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா் ச.அன்பரசன், ‘சமூக மாற்றத்தில் இளைஞா்களின் பங்கு’ என்ற தலைப்பில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன், ‘கம்பனில் பிடித்த பாடல்’ என்ற தலைப்பில் கல்லூரியின் கணினி துறைத் தலைவா் கா.சங்கா் ஆகியோா் பேசினா்.

கட்டுரை, வினாடி-வினா, பட்டிமன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு செய்யாறு அரசு கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் பெ.சுப்பிரமணியன் அறிவுத் திறனை வளா்க்கும் நூல்கள், சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினா்.

‘கம்பராமாயணம்- படித்து மகிழ்வதற்கா, பின்பற்றி வாழ்வதற்கா’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத் தலைவராக கம்பன் கழகத் தலைவா் இராச.நடேசன் செயல்பட்டாா்.

விழாவில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழ் அறிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சி.ஆனந்தி தொகுத்து வழங்கினாா். கம்பன் கழக மகளிா் அணிச் செயலரும் ஏகேடி கல்வியியல் கல்லூரிப் பேராசிரியருமான மகா.பருவத அரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT