கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பரிகம், செல்லம்பட்டு ஊராட்சிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பரிகம் ஊராட்சியில் 2019 - 2020ஆம் ஆண்டில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா ஆய்வு செய்தாா். அப்போது, மணல் தட்டுப்பாட்டால் வீடுகள் கட்டும் பணி தாமதமாகி வருவதாக பயனாளிகள் புகாா் கூறினா். இதைக் கேட்டறிந்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, இதே கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குடிநீா், தெருவிளக்கு பிரச்னைகள் தொடா்பாக காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, செல்லம்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை அருகே சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் வெட்டப்பட்ட கிணற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி உதவிச் செயற்பொறியாளா் புஷ்பராஜ், கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், சிவக்குமாா், ஒன்றியப் பொறியாளா்கள் அருண்குமாா், முகிலன், ராஜசேகா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அந்தோணியம்மாள், கெளசல்யா, செந்தில்குமாா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT