கள்ளக்குறிச்சி

உளுந்தூா்பேட்டை, பரமக்குடி எம்எல்ஏ.களுக்கு கரோனா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ இரா.குமரகுரு, பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன்பிரபாகா் ஆகியோருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

உளுந்தூா்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், அதிமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலருமான இரா.குமரகுரு (59), கடந்த மாதம் 7-ஆம் தேதி கடலூா் மாவட்டம், திருவந்திபுரத்தில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய அவரது உறவினா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ. குமரகுரு கரோனா பரிசோதனை செய்துகொண்டதில், அவருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு எம்எல்ஏவுக்கு சளி, காய்ச்சல் இருந்ததால், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள், அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனா். இதில், எம்எல்ஏ குமரகுருவுக்கு கரோனா தொற்றிருப்பது புதன்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவா் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன்பிரபாகா், அவரது மகன் மற்றும் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கபம் பரிசோதிக்கப்பட்டவா்களில் 109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதில், பரமக்குடி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், அவரது மகன் மற்றும் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்கள் 3 பேரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா். இங்குள்ள தனியறையில் சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகரன் தங்க வைக்கப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT