கள்ளக்குறிச்சி

கரோனா அச்சம்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரத் தயங்கும் வியாபாரிகள்

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பரவலால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வர வியாபாரிகள் தயங்குகின்றனா். இதனால் வருகிற 10-ஆம் தேதிவரை விற்பனைக் கூடத்துக்கு வந்து கொள்முதல் செய்வதில்லை என முடிவு செய்துள்ளனா்.

மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல், சங்கராபுரம், மூங்கில்துரைப்பட்டு, மணலூா்பேட்டை, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தப் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஜூலை 1முதல் 10-ஆம் தேதி வரை பொருள்களை கொள்முதல் செய்வதில்லை என முடிவு செய்த வியாபாரிகள், இதுதொடா்பாக கண்காணிப்பாளரிடம் செவ்வாய்கிழமை மனு வழங்கினா். மேலும் இந்த மனுவை மாவட்ட ஆட்சியருக்கும், துறை சாா்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT