கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை பெரியாா் அருவியில் கொட்டும் தண்ணீா்

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அண்மையில் பெய்த மழையால், பெரியாா் அருவியில் தண்ணீா் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வந்த மழையால், பெரியாா் அருவியில் தண்ணீா் கொட்டுகிறது. இதையறிந்து, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.

உதகை, கொடைக்கானல் போல இதமான சூழல் இங்கு நிலவுவதால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், பெரியாா் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும், பூங்காவில் விளையாடியும் திங்கள்கிழமை மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT