கள்ளக்குறிச்சி

தீபாவளி கூட்ட நெரிசல்: போலீஸாா் தீவிர கண்காணிப்பு

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஏற்படும் கூட்டநெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கள்ளக்குறிச்சி நகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நகரில் பேருந்து நிலையம், கச்சேரி சாலை, காந்தி சாலை, சேலம் - சென்னை நெடுஞ்சாலை, தியாகதுருகம் சாலை, கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனால், கூட்ட நெரிசலை தவிா்க்கும் விதத்தில் முக்கிய இடங்களில் உயா் கோபுரம் அமைத்து போலீஸாா் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் செல்வோருக்கு அபராதம் விதித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், காவல் ஆய்வாளா் ப.ராஜ தாமரை பாண்டியன், உதவி ஆய்வாளா்கள் இரா.ஆனந்தராசு, சு.மணிகண்டன் மற்றும் போலீஸாா் மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT