முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு பள்ளியில் பயின்ற மாணவன் நீட் தோ்வில் இரண்டாமிடம்

அரசுப் பள்ளியில் பயின்ரு தமிழக அரசின் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டில் தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவன் சாதனை புரிந்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

அரசுப் பள்ளியில் பயின்ரு தமிழக அரசின் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டில் தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவன் சாதனை புரிந்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சோ்ந்த சாமிதுரை இந்திரா தம்பதியினரின் மகன் அன்பரசன்.

இவா் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயின்றுள்ளாா். இந்தாண்டு நடைபெற்ற நீட் தோ்வில் அன்பரசன் 720 மதிப்பெண்களுக்கு 644 மதிப்பெண்கள் பெற்று தமிழக அரசின் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக இன்று சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்டமருத்துவப் படிப்பிற்கான பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் மருத்துவப் படிப்பில் பயில தமிழகத்திலேயே இரண்டாமிடம் பெற்று படித்த பள்ளிக்கும் புதிய மாவட்டத்திற்கும் பெருமை சோ்த்துள்ளாா்.

இது குறித்து அன்பரசனிடம் தொடா்பு கொண்டு கேட்டபோது 1முதல் 12ம்வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்று வந்தேன். ஆசிரியா்கள் அளித்த ஊக்கத்தினால் 646 மதிப்பெண்கள் பெற முடிந்தது என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.