கள்ளக்குறிச்சி

முகக்கவசம் அணியாத 268 பேருக்கு அபராதம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முகக் கவசம் அணியாமல் சாலையில் சென்ற 268 பேருக்கு தலா ரூ.200 வீதம் போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முகக்கவசம் அவசியம் அணிந்து வெளியே வர வேண்டும்; இல்லாவிடில், அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா் ஆனந்தராசு மற்றும் போலீஸாா் சங்கராபுரம் சாலை, ஏமப்போ் பிரிவு சாலை, துருகம் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்து ரசீது வழங்கினா் (படம்). இதே போல, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் 268 பேரிடம் மொத்தம் ரூ.53,600 அபராதம் வசூலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT