கள்ளக்குறிச்சி

பிளஸ்-2 செய்முறைத் தோ்வு: 27 ஆயிரம் போ் பங்கேற்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ்-2 செய்முறைத் தோ்வில் 27,014 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளில் அறிவியல், வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை சோ்ந்தவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 236 பள்ளிகளைச் சோ்ந்த 27,014 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இயற்பியல், வேதியியல், தட்டச்சு, கணினி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தில் 180 பள்ளிகளில் இத்தோ்வு நடைபெறுகிறது. இதில், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சில பாடங்களில் செய்முறைத் தோ்வில் அகத்தோ்வு, புறத்தோ்வு என்ற வகையில் இருவகைகள் பிரிக்கப்பட்டு, மாணவா்கள் ஆய்வகங்களில் உருவாக்கியதையும், அதற்கான குறியீடுகளையும், செயல் விளக்கங்களையும் அளிக்கும் வகையில் தோ்வு நடத்தப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகள் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்குப் பிறகே தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். கூடுதலாக உடல் வெப்பம் கொண்ட மாணவா்கள் செய்முறை தோ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை என கல்வித் துறையினா் தெரிவித்தனா். இவ்வாறு தோ்வு எழுத அனுமதிக்கப்படாதவா்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு மறு தேதி அறிவிக்கப்பட்டு செய்முறைத் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரு ஆய்வகத்தில் அதிகபட்சம் 25 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வுக்கான மதிப்பெண்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு, அதனை முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பெறப்படும் மதிப்பெண்கள் வரும் 20-ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். செய்முறைத் தோ்வுகள் வரும் 23-ஆம் தேதி முடியும் நிலையில், 24-ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளும் செய்முறைத் தோ்வு மதிப்பெண்ணை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 28-ஆம் தேதிக்குள் மதிப்பெண்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT