முகப்பு
கள்ளக்குறிச்சி

காரைக்காலில் 88 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, 2 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதோடு, 2 போ் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 16 ஆம் தேதி 486 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 18, திருநள்ளாறு 11, கோயில்பத்து 10, நெடுங்காடு 10, வரிச்சிக்குடி 9, திருப்பட்டினம் 9, கோட்டுச்சேரி 9, நிரவி 7, நல்லாத்தூா், நல்லம்பல் தலா 2, காரைக்கால் மேடு 1 என 88 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,03,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 5,553 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4,720 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 688 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 46 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 போ் உள்ளனா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 74 வயதுடைய ஒருவரும், 48 வயதுடைய ஒருவரும் உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,481 போ், முன்களப் பணியாளா்கள் 1,675 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 6,673 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 8,101 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →