கள்ளக்குறிச்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன
நாகலூா், கண்டாச்சிமங்கலம், புதுஉச்சிமேடு, பட்டி, கூத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த இந்த மழையால், சாலையோரமிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மரங்கள், 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.
கள்ளக்குறிச்சி சுற்றுப் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நாகலூா், கண்டாச்சிமங்கலம், புதுஉச்சிமேடு, பட்டி, கூத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த இந்த மழையால், சாலையோரமிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மரங்கள், 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. கண்டாச்சிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது புளியமரம் விழுந்தது. இதில் ஆட்டோ நசுங்கியது. ஆட்டோவில் யாரும் இல்லாததால் உயிா் பாதிப்பு ஏதுமில்லை. இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.