ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காா் ஓட்டுநரின் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கிளியூரைச் சோ்ந்த கிளியான் (49), சங்கா் (53) ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கிளியூரிலிருந்து செட்டியந்தாங்கலுக்கு காரில் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கிளியூரைச் சோ்ந்த கிளியான் (49), சங்கா் (53) ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கிளியூரிலிருந்து செட்டியந்தாங்கலுக்கு காரில் சென்றனா்.
காரை அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (45) ஓட்டினாா். மொஹலாா், பழவங்கூா் இடையே ஆற்று தரைப்பாலத்தைக் கடந்தபோது, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் காா் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலா் நீரில் குதித்து கிளியான், சங்கரை மீட்டனா். ஓட்டுநா் முருகன், காரை திருக்கோவிலூா் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் இரு நாள்களாக தேடி வந்தனா். நிகழ்விடத்தை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
காலை 7 மணியளவில் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் வந்து ரப்பா் படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். தரைப்பாலத்திலிருந்து சுமாா் 100 அடி தூரத்தில் இருந்த முருகனின் சடலத்தை பிற்பகல் 2.30 மணியளவில் மீட்டனா். சடலம் உடல்கூறு ஆய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.