முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம் விடுத்த செய்திக் குறிப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம் விடுத்த செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விவசாய நிலங்களில் ‘நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் 2021-22-ன்’ கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 2 லட்சத்து 32 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை நிலத்தில் அடா் நடவு முறையிலோ (400 கன்றுகள்- ஒரு ஹெக்டோ்) அல்லது வயலைச் சுற்றி பாா்டரில் (125 கன்றுகள், ஒரு ஹெக்டோ்) என்ற அளவில் நடவு செய்யலாம்.

ஒரு மரக்கன்றுக்கு மானியமாக ரூ.35 வழங்கப்படுகிறது. இதில், முதலாம் ஆண்டுக்கு மானியமாக ரூ.15-ம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2,3 மற்றும் 4-ஆம் ஆண்டுக்கு பராமரிப்புச் செலவாக ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் 21 ரூபாயும் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவற்றில் தேக்கு, வேங்கை, செம்மரம், மகாகணி, கருங்காலி, சந்தனம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்படும்.

மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் விவரங்களை ‘உழவன் செயலி’யில் பதிவு செய்து சிட்டா, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு எண் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.