சாலை விபத்து: இளைஞா் பலி
சின்னசேலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.
சின்னசேலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.
சின்னசேலத்தை அடுத்த அம்மகளத்தூா் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிவேல் (36). இவரது விளை நிலத்தில் வேலை செய்து வந்தவரை வியாழக்கிழமை சின்னசேலத்தை அடுத்த பெருமங்கலம் கிராமத்தில் விட்டுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை அவரைத் தேடினா்.
இந்த நிலையில், பெருமங்கலம் கிராமத்தில் தனியாா் விளை நிலத்துக்கு அருகே மோட்டாா் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து கிடந்ததுடன், தலையில் பலத்த காயத்துடன் மணிவேல் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.