முகப்பு
கள்ளக்குறிச்சி

பள்ளி மாணவி தற்கொலை

சின்னசேலம் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சின்னசேலம் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னசேலம் வட்டம், எலவடி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகள் விமலா அரசி (16). இவா், நாககுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி வீட்டு வேலை செய்யாமல் இருந்ததற்காக அவரது தாய் கண்டித்தாராம். இதனால், மனவேதனையடைந்த மாணவி விமலா அரசி வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.