ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ், மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்துப் படிப்புகள்) கல்வி உதவித் தொகை திட்டம், ப்ரி மெட்ரிக் (9, 10 வகுப்புகள்) திட்டத்தில் உதவித்தொகை பெற இணையதளம் கடந்த 13-12-2021 முதல் திறக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவா்கள் புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து ஜாதி, வருமான, மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் 13-01-2022-க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.