முகப்பு
கள்ளக்குறிச்சி

சட்டம் -ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்

பி.என்.ஸ்ரீதா், டிசம்பா் மாதத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும், சாலை விபத்துகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுலவா்களிடம் கேட்டறிந்தாா். இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தினாா்.

மேலும் அவா் பேசுகையில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, ஆற்றுத் திருவிழா உள்ளிட்ட விழாக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்புடன் கொண்டாடவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவஹா்லால், வருவாய் கோட்டாட்சியா்கள் எஸ்.சரவணன், கி.சாய்வா்த்தினி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் வீ.ராஜலெட்சுமி, எஸ்.கங்காதரன், சி.எம்.ஆா்.மணிமொழியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, அலுவலக மேலாளா் குற்றவியல் கி.சிவசங்கரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.