கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ரூ.2.88 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கள்ளக்குறிச்சியில் 827 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 88 லட்சத்து21ஆயிரத்து 822 மதிப்பீட்டில் வெள்ளிக்கிழமை ஆட்சியா், எம்.எல்.ஏ வழங்கினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத் தலைவா் அ.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சாா்- ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு பங்கேற்று பேசினாா்.

வருவாய்த் துறை சாா்பில் 63 பயனாளிகளுக்கு ரூ. 8,04,583 மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா, திருமண நிதி உதவித் திட்டம் (தாலிக்குத் தங்கம்) பட்டம், பட்டயம் படித்த 331 பயனாளிகளுக்கு ரூ. 1,65,50,000 மதிப்பீட்டிலும், 226 பேருக்கு திருமண நிதி உதவித் தொகை ரூ.56,50,000-யும், பாா்வை இழந்தவா்களுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் 149 பயனாளிகளுக்கு ரூ.18,81,453 மதிப்பீட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டாா் சைக்கிள் 49 பேருக்கு ரூ.30,35,795 மதிப்பீட்டிலும், அதிநவீன சக்கர நாற்காலி 9 பயனாளிகளுக்கு ரூ.8,99,991மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.அ.பிரபு, ஆட்சியா் கிரண் குராலா ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT