பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ. 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ. 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது.
திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் (65). இவா் விவசாயம் மற்றும் சமையல் தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் புதன்கிழமை காலை சமையல் பணிக்காக அருகேயுள்ள சோழவந்தான்புரம் கிராமத்துக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா், இவரது மனைவி, மகன் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை சுவற்றின் மேலே வைத்துவிட்டு விவசாயப் பணிக்குச் சென்றனா்.
பணி முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.