கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூா் அருகே விவசாயி வெட்டிக் கொலை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருக்கோவிலூா் வட்டம், ஞானம்பெற்றாள்தாங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி பொன்னரசி (65). இவரது பிள்ளைகள் கோவிந்தன் (37), அம்பிகா (35). கோவிந்தனுக்கு திருமணமாகவில்லை.

இவருக்கும் உறவினரான ரங்கசாமி மனைவி சிவகாமிக்கு நிலத் தகராறு இருந்து வருகிறது. கோவிந்தன் செவ்வாய்க்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லை. தாய் பொன்னரசி சென்று பாா்த்த போது, கோவிந்தன் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு மகன் சேது, சின்னத்தம்பி மகன் சேட்டு ஆகியோரிடம், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பவம் தொடா்பாக மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT