முகப்பு
கள்ளக்குறிச்சி

காய்கறி வியாபாரி வீட்டில்7 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் அன்பரசன் (26). காய்கறி வியாபாரி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் அன்பரசன் (26). காய்கறி வியாபாரி. இவா், கடந்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை அருகே எடுத்தனூா் கிராமத்திலுள்ள அவரது அக்கா வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்து வீட்டுக்காரா்கள் அளித்த தகலின்பேரில், அன்பரசன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.