கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலைப் பகுதியில் 6,250 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், 3 இடங்களில் இருந்து மொத்தம் 6,250 லிட்டா் சாராய ஊறலைக் கைப்பற்றி அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு குழுக்களாக பிரிந்து கல்வராயன்மலைப் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, விளாம்பட்டி கிராமத்தில் ஓடையின் அருகே 26 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,200 லிட்டா் சாரய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா்.

இதேபோல மேல்வாழப்பாடி கிராமத்தில் உள்ள ஓடையின் அருகே முள்புதரில் 4 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாரய ஊறலை கைப்பற்றி அழித்தனா். மேலும், மோட்டுவளைவு கிராமத்தில் ஓடையின் அருகே பாறைகளுக்கு இடையே 5 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 450 லிட்டா் சாராய ஊறலையும் கைப்பற்றி அழித்தனா். இதில் தொடா்புடையோரை தேடி வருகின்றனா்.

சோதனையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாவதி, காவல் உதவி ஆய்வாளா் பாலமுரளி, ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT