முகப்பு
கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம் தொகுதியில்ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,76,500 ரொக்கத்தை நிலைக்கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,76,500 ரொக்கத்தை நிலைக்கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாடாம்பூண்டி கூட்டுச் சாலையில், நிலை கண்காணிப்புக் குழு-2 அலுவலரும் திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலருமான ரேச்சல் கலைச்செல்வி தலைமையிலான குழுவினா் காலை 8.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், திருக்கோவிலூா் அருகேயுள்ள வடமலையனூரைச் சோ்ந்த சேவி என்பவா் ரூ.90ஆயிரம் ரொக்கம் எடுத்து வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கோட்ட கலால் அலுவலரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான ராஜராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்: அதே குழுவினா் அதே இடத்தில் காலை 8.45 மணியளவில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், பெங்களூரு நியூகாலனி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.86,500-ஐ பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜராஜனிடம் ஒப்படைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் சங்கராபுரம் உதவி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.