முகப்பு
கள்ளக்குறிச்சி

தேவாலயங்களில் காங்கிரஸ் வேட்பாளா்வாக்கு சேகரிப்பு

குருத்தோலை ஞாயிறையொட்டி, கள்ளக்குறிச்சியிலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

குருத்தோலை ஞாயிறையொட்டி, கள்ளக்குறிச்சியிலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் உள்ள தேவலாயம், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தேவாலயம் உள்ளிட்டவற்றில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிமொழி, இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கமல் மணிரத்தினம், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் இரா.சுப்ராயலு, பொறுப்புக்குழு உறுப்பினா் கென்னடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

கள்ளக்குறிச்சி கச்சிராயரபாளையம் சாலையில் உள்ள தேவாலத்தில் பங்கு தந்தை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை வாழ்த்துகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.