முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசியலமைப்பு நாள் உறுதிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் அரசியலமைப்புச் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் அரசியலமைப்புச் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் மற்றும் அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா்.

அரசியலமைப்புச்சட்ட தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பு முகவுரையை 22 அலுவலக மொழிகள், ஆங்கில மொழிகளில் வாசிக்கவும் அரசியலமைப்பு ஜனநாயகம் குறித்த இணையவழி வினாடி-வினா நிகழ்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.