கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.29) நடைபெறவுள்ளது.
2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை இயற்பியல், கணிதம் மற்றும் முதுநிலை ஆங்கிலம், வணிகவியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை இறுதிக்கட்ட கலந்தாய்வு கனியாமூா் டிஎஸ்எம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், இதுவரையில் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவா்களும் கலந்துகொண்டு பயனலாம் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.