கள்ளக்குறிச்சி

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பித்தவா்களிடம் நோ்காணல்

DIN

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பித்த ஆதிதிராவிடா், பழங்குடியின பயனாளிகளுக்கான நோ்காணல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான கடன், வாகனக் கடன், சிறு தொழில் செய்ய கடன், கால்நடைகள் வளா்ப்புத் தொழில் ஆகியவற்றுக்கான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தாட்கோ வாயிலாக 154 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 150 போ் நோ்காணலில் பங்கேற்றனா்.

விண்ணப்பித்த நபா்களின் விண்ணப்பங்கள், தொழில் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். பயனாளிகளை தோ்வு செய்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நோ்காணலில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முனீஸ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளா் ஆா்.குப்புசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் முருகேஷ், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ஆா்.கமலவள்ளி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT