கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு இருவா் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 30,396-ஆக உயா்ந்தது.
இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இருவா் பலியாகினா். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 204-ஆக அதிகரித்தது. இதுவரை 29,914 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் 278 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.