கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூா், திருக்கோவிலூா், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், திருநாவலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையமானஅன்னை தெரசா பொறியியல் கல்லூரி, திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையமான ஸ்ரீவித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையமான அரியலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறைகள், வாக்குச் சீட்டு பிரித்தல், வாக்குச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, திட்ட இயக்குநா் இரா.மணி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா்கள், ஒன்றியப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT