முகப்பு
கள்ளக்குறிச்சி

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முதல் கட்ட சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முதல் கட்ட சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசியதாவது:

மாநில தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6., அக். 9 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலா்கள் மாநில தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முதல் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (ரேண்டமைசேஷன்) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு அலுவலா்களின் விவரங்களை ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டமாக சுழற்சிமுறை பணிகள் கனிணி மூலம் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது திட்ட இயக்குநா் இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்), வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்)உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.