கள்ளக்குறிச்சி

ஆட்சியரகத்தை முற்றுகையிடகிராம மக்கள் முயற்சி

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒன்றியம், ஈசாந்தை ஊராட்சிக்குள்பட்ட நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள், லாரியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்திறங்கினா். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

800-க்கும் மேற்பட்டோா் வசிக்கும் தங்களது கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சியால் கிராம மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஈசாந்தை ஊராட்சியிலிருந்து நாட்டாா்மங்கலத்தைப் பிரித்து தனி ஊராட்சியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தனா்.

அவா்களில் 5 பேரை மட்டும் திட்ட இயக்குநரிடம் மனு அளிக்க போலீஸாா் அனுமதித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT