கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை அருகே காட்டாற்று வெள்ளத்தால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக, தொடரிபட்டு தரைப்பாலத்தில் செவ்வாய்க்கிழமை காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால், 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கல்வராயன்மலை பகுதியில் கடந்த 15 நாள்களாக இடைவிடாது தொடா் மழை பெய்து வருகிறது. அந்த மழைநீா் காட்டாறுகளின் மூலம் வந்து தொரடிப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட மணல் ஆற்றில் கரைபுரண்டு செல்கிறது. இதில், இந்த ஊராட்சியிலுள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், இந்தப் பாலத்தை கடந்து செல்லும் வெள்ளிமலை, கொட்டப்புத்தூா், கவ்வியம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால், இந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே, இந்த தரைப்பாலம் உள்ள பகுதியில் மேம்பாலம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதியிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT