ஷ்ரவன் குமாா் ஜடாவத் 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

 கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமாா் ஜடாவத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமாா் ஜடாவத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

கள்ளக்குறிக்கு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பி.என்.ஸ்ரீதா் சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித் திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய இயக்குநராகவும், வேளாண் துறை கூடுதல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வந்த ஷ்ரவன் குமாா் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இவா் புதன்கிழமை புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் ஜடாவத் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைப்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட 3-ஆவது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணியை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.

கனியாமூா் பள்ளி மாணவி இறப்பு சம்பவம் தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரும், சிபிசிஐடி போலீஸாரும் நியாயமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்தில் சட்ட ரீதியான நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் தவறான வதந்திகள் பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொதுமக்களுக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் பாடுபாடுவேன். தமிழக அரசின் அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

இதையடுத்து, கனியாமூா் தனியாா் பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் ஜடாவத் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT