முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகே அரசு நகரப் பேருந்து சரிவர கிராமத்திற்குள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே அரசு நகரப் பேருந்து சரிவர கிராமத்திற்குள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை 2 மூலம், கள்ளக்குறிச்சியில் இருந்து ஏறஞ்சி கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து தடம் எண் 3 இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்து இடைப்பட்ட கிராமமான புதிய உச்சிமேடு கிராமத்திலிருந்து உள்ளே ஒன்றரை கி.மீ.

தொலைவில் உள்ள பழைய உச்சிமேடு கிராமத்துக்கு காலை நேரத்தில் ஒரு முறையும், மாலை நேரத்தில் ஒரு முறையும் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நகரப் பேருந்தை பழையஉச்சிமேடு கிராமத்துக்கு இயக்காமல், புதுஉச்சிமேடு கிராமத்தோடு நிறுத்திவிட்டனா்.

இதனால், பேருந்து வசதி இல்லாமல் பழைய உச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்குச் செல்வோா், பொருள்கள் வாங்க கடைக்குச் செல்வோா், மாற்றுத் திறனாளிகள், முதியோா் என கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.

இதனால், ஆத்திரமடைந்த பழைய உச்சிமேடு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மாலை கிராமத்துக்கு வந்த பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்  ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் பேருந்து ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் போலீஸாா் வந்து கிராம மக்களிடம், பேருந்து முறையாக பழைய உச்சிமேடு கிராமத்துக்கு வந்து செல்வதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.