கள்ளக்குறிச்சி

நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளா் பணியிடை நீக்கம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்.ஒகையூா் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட இளநிலை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.

தியாகதுருகம் ஒன்றியம், எஸ்.ஒகையூா் கிராமத்தில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதரிடம் விவசாயிகள் புகாரளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், எஸ்.ஒகையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விழுப்புரம் மணடல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் பாலமுருகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், அங்கு இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த கலியமூா்த்தி முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கலியமூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT