கள்ளக்குறிச்சி மாவட்டபள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி
அண்ணா பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ஆம் தேதி மிதிவண்டிப் போட்டி நடைபெறவுள்ளது.
அண்ணா பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ஆம் தேதி மிதிவண்டிப் போட்டி நடைபெறவுள்ளது.
14-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி கச்சிராயப்பாளையம் வரை போட்டி நடைபெறுகிறது.
முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களுக்குள் வருவோருக்கு ரூ.250-ம், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 13 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும். 1.1.2006 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும்.
வயதுச் சான்றிதழை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வரவேண்டும். அத்துடன் ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
சாதாரண மதிவண்டியை கொண்டு வரவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து உரிய சான்றிதழ்களை அளித்து பதிவு செய்து கொள்ளவேண்டும்.
போட்டியின் போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் அளித்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். எனவே, மாணவ, மாணவிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 15-ஆம் தேதி பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.