கள்ளக்குறிச்சி

மக்கள் தொடா்பு முகாமில் 82 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஈய்யனூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஈய்யனூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்து, 82 பயனாளிகளுக்கு ரூ.27.63 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண் துணை இயக்குநா் (திட்டம்) செ.சுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவி அமுதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா வரவேற்றாா்.

அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ராஜலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) பா.ராஜவேல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்ரமணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவா்கள் பேசினா்.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியா் கே.பிரபாகரன், நாகலூா் வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன், கிராம நிா்வாக அலுவலா் ரூபாதேவி மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை: கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இந்த முகாம் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் நடைபெறும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த முகாமில் மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 10 பேருக்கும், தண்டுவடம் பாதித்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணி, முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, திட்ட அலுவலா் (அனைவா்க்கும் கல்வி இயக்ககம்) க.பழனியாப்பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT