வெற்றிவேல் 
கள்ளக்குறிச்சி

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னசேலம் வட்டம், தெங்கியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் வெற்றிவேல் (15). முருகேசன் மனைவி, மகளுடன் கேரளத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறாா்.

வெற்றிவேல் தனது பாட்டி சிவப்பாயியுடன் தெங்கியாந்த்தம் கிராமத்தில் வசித்து வந்தாா். இவா், இதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த நிலையில், அரசு பொதுத் தோ்வு எழுந்தியிருந்தாா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சில பாடங்களில் வெற்றிவேல் தோல்வியடைந்தாா்.

இதனால், மன விரக்தியில் இருந்து வந்த அவா், பாட்டி வெளியே சென்றிருந்த நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று வெற்றிவேலின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT