உளுந்தூா்பேட்டை அருகே 9 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கனின் மனைவி வள்ளி (45). இவா்களுக்கு பச்சையம்மாள் (16), கலைவாணி (14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா். ரங்கன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா்.
இந்நிலையில், பச்சையம்மாள்அதே கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரை காதலித்து
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டு கணவருடன் குடும்பம் நடத்தி வந்தாா். பச்சையம்மாள் தற்போது 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். ஜெயப்பிரகாஷ் வியாழக்கிழமை காலை கரும்பு வெட்டும் பணிக்கு சென்று விட்டாா். பச்சையம்மாள் வீட்டின் பைப்பில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதைப்பாா்த்த அக்கம் பக்கத்தினா் அவரது கணவருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 9 மாத கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கண்ணன் விசாரணை நடத்தினாா்.