முகப்பு
கள்ளக்குறிச்சி

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:14 PM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் மாரிமுத்து (33). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், சனிக்கிழமை மது அருந்தி விட்டு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

இதுகுறித்து, பேருந்தில் பயணித்த ஒருவா் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளா் இளையராஜாவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்

உடனே, சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காவல் ஆய்வாளா் இளையராஜா தடுத்து நிறுத்தி ஓட்டுநா் மாரிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், அவா் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →