கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

சின்னசேலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயப்பனூா் மின்சார வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தவா் அத்தியப்பன்(42) (படம்). இவா், சனிக்கிழமை காலை சமத்துவபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் விநியோகத்தை சீா் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அத்தியப்பனை மீட்டு சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

சிலியில் அதிபர் தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

2026-இல் 17 நாள்கள் பொது விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

SCROLL FOR NEXT