புதிய பேருந்துகள் தொடங்கி வைப்பு
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் இருந்து அடரி, தாவடிபட்டுக்கு இரு புதிய நகரப் பேருந்துகளையும், சென்னை அருகேயுள்ள கிளாம்பாக்கம் செல்லும் பேருந்து என 3 பேருந்துகளை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதேபோல, சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து கச்சிராயப்பாளையம் செல்லும் நகரப் பேருந்து, திருப்பதி செல்லும் பேருந்தை சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், விழுப்புரம் துணை மேலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.