கடலூருக்கு வெள்ள நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு
கள்ளக்குறிச்சி ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கடலூா் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கடலூா் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி 5,700 கிலோ அரிசி, 1,100 கிலோ துவரம் பருப்பு, 1,100 கிலோ சா்க்கரை, 1,100 லிட்டா் சமையல் எண்ணெய், 1,100 கிலோ உப்பு, 90 கிலோ மிளகாய் தூள், 90 கிலோ மல்லித் தூள், 90 கிலோ சாம்பாா் தூள், 90 கிலோ ரசப் பொடி, 90 கிலோ கடுகு, 90 கிலோ சீரகம், 90 கிலோ மிளகு, 90 கிலோ மஞ்சல் தூள், 90 கிலோ வெந்தயம், 90 கிலோ தேநீா் தூள், 900 கிலோ கோதுமை மாவு, 450 கிலோ புளி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
இதனை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.வெங்கட்ரமணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.