ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு
கள்ளக்குறிச்சியை அடத்த க.அலம்பளம் கிராமத்தில் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரகத்தில் உள்ள மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடத்த க.அலம்பளம் கிராமத்தில் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரகத்தில் உள்ள மனு பெட்டியில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், க.அலம்பளம் கிராமத்தில் சுமாா் 7 மீட்டா் அகலத்தில் ஏறி வாய்க்கால் உள்ளது. இந்த ஏரி வாய்க்கால் மூலம் அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவு விவசாய பாசனம் வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி வாய்க்காலை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனராம்.
இதனால், அந்த வழியாக விவசாயப் பணிக்காக வாகனங்கள் மற்றும் உழவு மாடுகள், வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வயல்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து, உடனடியாக ஆய்வு செய்து ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டிருந்த மனு பெட்டியில் போட்டு விட்டு சென்றனா்.