மது அருந்தியதில் ஒருவா் உயிரிழப்பு
மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபா் மீண்டும் மது அருந்தியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 8 ஜூலை, 2024 at 8:41 PM
கள்ளக்குறிச்சி: மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபா் மீண்டும் மது அருந்தியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ஜெ.சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்முடி மகன் ராஜசேகா் (38). மது பழக்கத்துக்கு அடிமையான இவா் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாராம். இந்த நிலையில், ராஜசேகா் மீண்டும் மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement