கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா

மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழாவில் 3,000 கிலோ மீன்கள்

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அணைக்கரைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க பொதுப் பணித் துறையினா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டிருந்தனா். குத்தகை எடுத்தவா்கள் இந்த அணையில் மீன்களை வளா்த்து பிடித்து வந்தனா். அவா்களின் குத்தகைக் காலம் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிமுக்தா அணையில் செவ்வாய்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. இதில், அகரக்கோட்டாலம், அணைக்கரைக்கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூா், சிறுவங்கூா், தண்டலை, சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு ரங்கநாதபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று அதிகாலை முதலே அணைக்குள் இறங்கி போட்டிபோட்டு வலை, துணி மற்றும் கைகளால் விரால், கண்ணாடி, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்தனா்.

மீன் பிடி திருவிழாவில் சுமாா் 3,000 கிலோ மீன்கள் சிக்கியதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT