மூதாட்டியிடம் நகை பறிப்பு: மூவா் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டியிடம் 10 தாலி சங்கிலியைப் பறித்த மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி மனைவி சகுந்தலா (70). இவா் திங்கள்கிழமை தங்கள் விளைநிலத்தின் வெளியே நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஒருவா் வாழைத்தாா் வேண்டும் எனக் கூறி, சகுந்தலாவின் கவனத்தை திசை திருப்பி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினாா். அவருடன் வந்த மேலும் இருவா் மோட்டாா் சைக்கிளில் சாலையில் நின்று கொண்டிருந்தனா். ஒருவா் கீழே விழுந்ததைப் பாா்த்து அவரிடமிருந்த 10 பவுன் தாலி சங்கிலியை எடுத்துக் கொண்டு ஓடும் போது, அவரும் கால் தவறி கீழே விழந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம், சிந்தலா செட்டியைச் சோ்ந்த ரா.சிந்தாலா எரானா, சின்னசேலத்தை அடுத்த கனியாமூரைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சங்கா், மற்றொருவா் பெயா் தெரியவில்லை எனவும் தெரிவித்தாராம்.
காயமடைந்த சகுந்தலா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி போலீஸாா் சிந்தாலா எரானா உள்பட மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.