பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வாணாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அய்யப்பன் (35). இவா், கடந்த 4-ஆம் தேதி அவரது வீட்டின் முன் உள்ள பாலத்தின் கட்டையின் மீது தூங்கிய நிலையில், திடீரென தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யப்பன், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.