முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: கோவையைச் சோ்ந்தவா் கைது

கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் ரூ.25 லட்சம் ஏமாற்றியதாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:26 PM
கலில் ரகுமான்
பகிர்:

கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் ரூ.25 லட்சம் ஏமாற்றியதாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரைச் சோ்ந்தவா் துரை (65). இவரிடம் கோவை மாவட்டம், போத்தனூரைச் சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் கலில் ரகுமான் அறிமுகமாகியுள்ளாா்.

துரை மகனுக்கு அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கலில் ரகுமான் கடந்த 20.2.24 அன்று ரூ.9,68,500 பெற்றாராம். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் துரைக்கு கலில் ரகுமான் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதேபோல, கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி சாலைப் பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தியிடம் 3.10.24 அன்று அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.15,41,500 பெற்றுக்கொண்டு கலில் ரகுமான் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாா்களின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, கலில் ரகுமானை புதன்கிழமை கைது செய்தனா்.